search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலம் இடிந்து விழுந்தது"

    மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் மேலும் ஒரு பாலம் இன்று உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #KolkataBridgeCollapse
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் மேஜர்ஹட் மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் மேம்பாலத்துக்கு கீழே சென்று கொண்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கின. இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    இடிந்து விழுந்த மேஜர்ஹட் மேம்பாலத்தை முதல் மந்திரி மம்தா பானர்ஜி பார்வையிட்டார். விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரின் பன்சிடேவா பகுதியில் மேலும் ஒரு பாலம் இன்று உடைந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். போக்குவரத்து பெரிதும்
    பாதிக்கப்பட்டது.

    இரு தினங்களுக்கு முன் மேஜர்ஹட் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், இன்று மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #KolkataBridgeCollapse
    பாகிஸ்தான் நாட்டின் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆற்றின் மீதிருந்த மரப்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. #PoKbridgecollapse #Fivestudentskilled
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீலம் பள்ளத்தாக்கு என்கிற மாவட்டம் உள்ளது. இங்கு மிகப்பெரிய ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றை மக்கள் கடந்து செல்வதற்காக ஆற்றின் நடுவே மரத்தினாலான தொங்கு பாலம் இருந்தது. தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இந்த பாலத்தில் ஒரே சமயத்தில் அதிகபட்சமாக 4 பேர் மட்டுமே செல்ல முடியும்.

    இதுதொடர்பாக அங்கு எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் இங்கு சுற்றுலா வரும் பயணிகள் இதனை பொருட்படுத்தாமல் மரப்பாலத்தில் கூட்டம் கூட்டமாக செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

    இந்நிலையில், பைசலாபாத் மற்றும் லாகூரில் இருந்து 2 தனியார் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று நீலம் பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.

    அப்போது அவர்கள் அனைவரும் ஆற்றின் நடுவே இருந்த மரப்பாலத்தில் ஏறி நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். திடீரென அந்த மரப்பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தது. இதில் பாலத்தின் மீது நின்றுகொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் ராணுவவீரர்கள் மீட்பு குழுவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மீட்பு குழுவினர் ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடினர். எனினும் 5 மாணவர்களை பிணமாக தான் மீட்க முடிந்தது.

    இந்நிலையில் மேலும் 2 மாணவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

    11 மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 9 மாணவர்களை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை மீட்பதற்கான முழு முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.  #PoKbridgecollapse #Fivestudentskilled 
    பாகிஸ்தான் நாட்டின் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆற்றின் மீதிருந்த மரப்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். #PoKbridgecollapse #Fivestudentskilled
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் உள்ள லாகூர் மற்றும் பைசலாபாத் நகரங்களை சேர்ந்த இரு தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள நீலம் பள்ளத்தாக்கு பகுதிக்கு இன்று சுற்றுலா வந்தனர்.

    அங்குள்ள ஆற்றங்கரையோரம் நின்று செல்பி எடுக்க நினைத்த அவர்கள் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள சிறிய மரப்பாலத்தின் மீது கும்பலாக நின்று புகைப்படம் எடுத்தனர். பாரம் தாங்காமல் மரப்பாலம் நொறுங்கி ஆற்றில் விழுந்த விபத்தில் சுமார் 25 மாணவர்கள் ஆற்றுச்சுழலில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர்.

    தகவல் அறிந்து விரைந்துவந்த ராணுவம் மற்றும் மீட்புப்படையினர் தண்ணீருக்குள் குதித்து சிலரை உயிருடனும், 5 மாணவர்களை பிரேதமாகவும் மீட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #PoKbridgecollapse #Fivestudentskilled 
    ×